மார்த்தாண்டம், மே 31: படந்தாலுமூட்டில் மெயின் ரோட்டை தொட்டு நின்ற சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் எதிர்பாராத விதமாக கடந்த 22ம் தேதி பிற்பகல் முறிந்து தேசிய நெடுஞ்சாலையில் குறுக்காக விழுந்தது. இந்த மாமரம் தடிகள் மற்றும் கிளைகள் முறித்து ரோடு ஓரத்தில் மாற்றப்பட்டது இருப்பினும் வாகனங்கள் ரோடு ஓரத்தில் இந்த பகுதியில் நிறுத்த முடியாமல் இடையூறாக இந்த தடிகள் காணப்பட்டன.
இந்நிலையில் இந்த மரம் நேற்று கொட்டும் மழையில் ஏலம் விடப்பட்டது. நெடுஞ்சாலைதுறை உதவி இன்ஜினியர் காசி ஆனந்தம் தலைமையில் ஏலம் நடைபெற்றது. 9 பேர் ஏலத்தில் பங்கேற்றனர். ராதாகிருஷ்ணன் என்பவர் ரூபாய் 40 ஆயிரத்து 900க்கு ஏலம் பிடித்தார் 18% ஜிஎஸ்டி சேர்த்து மொத்தம் ரூபாய் 48,262க்கு ஏலம் போனது.