திருச்சி, செப்.2: திருச்சி பஞ்சப்பூரில் புதிய பேருந்து முனையம் கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என். நேரு நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் ரூ.350 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. அதனை சுற்றி பல்வேறு கட்டமைப்புகள் கொண்டு வரப்பட உள்ளது. இந்த நிலையில் திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பேருந்து முனையம் கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகர மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.