திருவண்ணாமலை, ஜூன் 18: திருவண்ணாமலை அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் அருகே பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் பெண் சிசு சடலமாக மீட்கப்பட்டது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுற்றுச் சுவர் அருகே, பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் பெண் சிசு தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் வீசப்பட்டு கிடந்தது. அந்த வழியாக சென்ற வர்கள், பச்சிளம் பெண் சிசுவை பார்த்து அங்குள்ள புற காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்களுடன் விரைந்து சென்ற போலீசார், இறந்து கிடந்த பெண் சிசுவை மீட்டனர். மேலும், பெண் சிசு இறந்த பிறந்ததா அல்லது திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கத்துடன் வீசிச் சென்றனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பச்சிளம் பெண் சிசு சடலம் மீட்பு போலீஸ் தீவிர விசாரணை திருவண்ணாமலை அரசு மருத்துவமனை சுற்றுச் சுவர் அருகே
0