வேலூர், அக்.5: கணியம்பாடியில் முள்புதரில் வீசிச்சென்ற பச்சிளம் பெண் குழந்தையை நாய்கள் கடித்து குதறின. தகவலறிந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் கணியம்பாடி திரு.வி.க.நகர் பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் முட்புதரில் பச்சிளம் குழந்தை ஒன்றை நாய்கள் கடித்து குதறியபடி கவ்விக் கொண்டு வெளியே வந்துள்ளது. அப்போது அந்த வழியாக பொதுமக்கள் இதை பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த நாய்களை விரட்டி உள்ளனர். மேலும் இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் பார்த்தபோது இறந்த நிலையில் கிடந்தது பச்சிளம் பெண் குழந்தை சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் சடலம் அந்த பகுதியைச் சேர்ந்தவர்களின் குழந்தை இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து சடலத்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: இறந்த நிலையில் இருந்த பச்சிளம் பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை பிறந்து 10 முதல் 15நாட்கள் ஆகி இருக்கும். குழந்தையின் கை மற்றும் கால்களை நாய்கள் கடித்து குதறி உள்ளது. தகாததொடர்பில் பிறந்த பெண் குழந்தை என்பதால் உயிரோடு முள்புதரில் வீசிவிட்டு சென்றார்களா? அல்லது குழந்தையை ெகாலை செய்து சடலத்தை வீசிவிட்டு சென்றார்களா? என்பது தெரியவில்லை. இருப்பினும் நாய்கள் முட்புதரில் இருந்து சடலத்ைத வெளியே இழுத்து வந்துள்ளது. அப்போது பொதுமக்கள் பார்த்து தகவல் தெரிவித்தனர். நாய்கள் கவ்விய சடலத்ைத மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தையின் தாய் யார்? உடல்நல் பாதித்து இறந்ததால் முள்புதரில் வீசி சென்றார்களா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். பச்சிளம் ெபண் குழந்தையின் சடலத்தை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.