பரமத்திவேலூர், ஆக.24: பரமத்திவேலூர் அருகே, பொத்தனூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, கடந்த 20ம் தேதி காலை திருவாசகம் முற்றோதலும், 21ம் தேதி காலை மகா கணபதி வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று, புனித நீராடி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனர். 22ம் தேதி கோபுரகலசம் வைத்தல், கண் திறப்பு நடந்தது. நேற்று காலை கோயிலின் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் பொத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலை திருக்கல்யாண உற்சவமும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடந்தது.