கோத்தகிரி, செப்.14: நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் கோரியும், உயர்நீதி மன்ற தீர்பை அமல் படுத்த கோரியும் கடந்த 1ம் தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் நாக்குபெட்டா படுகர் நல சங்க சார்பில் 13வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரத போராட்டத்தில் கேர்பெட்டா, கேர்பெட்டா ஒசஹட்டி, கேர்பெட்டா நடுஹட்டி-பெந்தட்டி, கொணவக்கரை, பேட்டலாட, தப்பக்கம்பை கிராமத்தை சேர்ந்த கலந்து கொண்டனர்.
முன்னதாக கிராமத்திலிருந்து நடைபயணமாக வந்து குலதெய்வமான எத்தையம்மன் வழிபட்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள வியாபாரிகள் கடை அடைப்பு செய்து இருந்தனர். ஆட்டோக்கள் ஓடாமல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். கூடலூர் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அனைத்து கிராமங்களில் தேயிலை விவசாயிகள் இலை பறிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.