விராலிமலை, மே 23: இலுப்பூர் அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுங்கன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அடுத்துள்ள ராப்பூசல் கலிங்கிப்பட்டி மரிச்சிக்கட்டி களத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் வளர்த்து வந்த கிடேரி கன்று ஒன்று நேற்று காலை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது. அப்போது அங்குள்ள மின் மோட்டார்அறை அருகே மோட்டாருக்கு செல்லும் மின் வயர் அறுந்து கிடந்துள்ளது. அதனை மிதித்த பசுங்கன்று உடலில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.