ஓசூர், அக்.21: ஓசூரில் மறைந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு, பாஜ சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட பாஜ தலைவர் நாகராஜ் தலைமை வகித்து, பங்காரு அடிகளார் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் னிவாசன், மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், கிழக்கு மாநகர தலைவர் மணிகண்டன், இளைஞர் அணி தலைவர் வீரேந்திரா, மகளிர் அணி தலைவர் மஞ்சுளா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு குமார், மாநகர நிர்வாகிகள் தாரணி, நாகராஜூ, சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.