மன்னார்குடி, மே 24: வைகாசி விசாகத்தை முன்னிட்டு மன்னார்குடியில் பெருமாள் உதய கருட சேவை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.வைகாசி விசாகத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன் றான மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயிலில் பெருமாள், கோபிநாதன் பெருமாள் சகிதமாக வைகுண்ட நாதன் திருக்கோளத்தில் எழுந்தருளி உதய கருட சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.இதை முன்னிட்டு, பெருமாள் கருட வாகனத்தில் புறப்பட்டு பாமணி ஆற்றங் கரையில் எழுந்தருளியுள்ள கைலாசநாதர் கோயிலுக்கு சென்றார். அதுபோல், மன்னார்குடி இரட்டைக் குளம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோபிநாதன் கோயில் இருந்து பெருமாள் கருட வாகனத்தில் புறப்பட்டு கைலாசநாதர் கோயிலுக்கு வந்தார்.பின்னர், ராஜகோபால சுவாமி, கோபிநாதன் பெருமாள் சகிதமாக வைகுண்ட நாதன் திருக்கோலத்தில் எழுந்தருளி உதய கருட சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் கருடர் இளவர சன், செயல் அலுவலர் மாதவன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முத்து மாணிக்கம், மனோகரன், நடராஜன், லதா வெங்கடேசன் மற்றும் தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
பக்தர்கள் மகிழ்ச்சி: வைகாசி விசாகத்தை முன்னிட்டு மன்னார்குடியில் பெருமாள் உதயகருட சேவை
52