பொன்னமராவதி. ஜூன் 10: பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. தமிழ்கடவுளான முகப்பெருமானின் சிவபெருமானின் அம்சமாக அவரது நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியில் இருந்து அவதரித்தவர் முருகப்பெருமான். வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் என புராணங்கள் சொல்கின்றன. அதனால், அவர் அவதரித்த திருநாளை வைகாசி விசாகமாக கொண்டாடப்படுகின்றது. இதன் படி, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பாலமுருகன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பாலமுருகன் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.