வேலூர், ஜூன் 11: வேலூரில் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் கொடுக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தால் அதிகாரிகள் திரும்பி சென்றனர். வேலூர் மாநகராட்சி 59வது வார்டுக்குட்பட்ட கன்சால்பேட்டை, ஆஞ்சநேயர் கோவில் தெருவில் உள்ள 46 வீடுகள் அரசு இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வீடுகளை காலி செய்ய கோரி ஏற்கனவே மாநகராட்சி சார்பில் தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதை அவர்கள் வாங்க மறுத்துவிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் கொடுக்க சென்றனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு நோட்டீஸ் வாங்க மறுத்துவிட்டனர். மேலும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நோட்டீஸ் கொடுக்காமல் திரும்பி சென்றனர். விரைவில் போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வினியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோட்டீஸ் கொடுக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதம் பொதுமக்களின் எதிர்ப்பால் திரும்பி சென்றனர் வேலூரில் வீடுகளை காலி செய்ய
83