ஈரோடு, செப். 4: ஈரோடு காந்திஜி ரோடு, தலைமை தபால் நிலையம் அருகில் ‘நேத்ராஸ்’ என்ற பெயரில் புதிய ஜவுளிக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.இது குறித்து நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘நாங்கள் ஜவுளி மொத்த வியாபாரத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்று முத்திரை பதித்துள்ளோம். தற்போது, ஈரோடு காந்திஜி ரோட்டில் புதிதாக ரீடைல் ஜவுளி வியாபாரத்தை துவங்க உள்ளோம்.
திறப்பு விழாவையொட்டி அன்று ஜவுளி வாங்கும் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன. பட்டு சேலைகளுக்கு ஆண்டு முழுவதும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி தரப்படுகிறது. எங்களிடம் ஆண், பெண், சிறுவர், சிறுமிகள் அனைவருக்கும் தேவையான அனைத்து முன்னணி கம்பெனிகளின் ரெடிமேட் ஆடைகள், ஜவுளி ரகங்கள், பட்டுச் சேலைகள் அனைத்தும் கிடைக்கும்’’ என்றனர். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள நேத்ராஸ் குடும்பத்தினர் செய்து வருகிறார்கள். மேலும், விவரங்களுக்கு 95413 02995 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.