மார்த்தாண்டம், அக். 5: மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரியில் கல்வியாளரும், எழுத்தாளருமான எ.ஜெ. பென்சாம் எழுதிய ‘தமிழ்நாட்டில் ஆரம்ப நிலை கிறிஸ்தவம்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. சேகர ஆயர் வெஸ்லின் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். கல்லூரி தாளாளர் வினோத்குமார், முனைவர் டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குமரி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜோ பிரகாஷ் நூலை வெளியிட்டார். முதல் பிரதியை கேரள பல்கலைக்கழக பேராசிரியர் கியூபர்ட் ஜோ பெற்றுக் கொண்டார். கல்வியாளர் ராபர்ட் குமார், முனைவர் கமல செல்வராஜ், தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற தமிழறிஞர் முளங்குழி லாசர் ஆகியோர் நூல் குறித்து பேசினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிந்துகுமார், குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி வேலையன், மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க தலைவர் அல் அமீன், நாகப்பன், கொடுங்குளம் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.