உடுமலை: உடுமலை அருகே கல்லாபுரம் பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. உடுமலை அருகே அமராவதி அணையில் இருந்து, கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்கள் நேரடி பாசன வசதியை பெறுகின்றன. ஆண்டுக்கு 10 மாதங்கள் அணையில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. கல்லாபுரம் பகுதியில் சுமார் 1300 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இதில் 800 ஏக்கரில் விவசாயிகள் முதல் போக நெல் பயிரிட்டுள்ளனர். மேலும் அணையை ஒட்டியுள்ள மீன் பண்ணை, பூச்சிமேடு, இந்திரா புதுநகரில் மட்டும் 200 ஏக்கரில் நெல் பயிரிட்டிருந்தனர். தற்போது நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,