நெல்லை,ஜூன்11: நெல்லை மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம் ஜூன் 17ம் தேதி 8 தாலுகாக்களில் நடைபெற உள்ளதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; நெல்லை மாவட்டத்தில் உள்ள உழவர் பாதுகாப்புத்திட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், அவர்தம் சார்பு உறுப்பினர்களின் திருமண உதவித்தொகை, 2025-2026ம் கல்வி ஆண்டுக்கான கல்லூரி கல்வி உதவித்தொகை மற்றும் மூல உறுப்பினர்களுக்கான விபத்து நிவாரத்தொகை, உறுப்பினர்கள் இறப்பிற்கான ஈமச்சடங்கு, இயற்கை மரண உதவித்தொகை விண்ணப்பங்கள் பெறுவதற்கான முகாம் நெல்லை, பாளை, மானூர், நாங்குநேரி, ராதாபுரம், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், திசையன்விளை தாலுகாக்களில் உள்ள குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களின் குடியிருப்பில் வைத்து வரும் 17ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் உழவர் பாதுகாப்பு திட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் பங்கேற்று பயன் பெறுமாறு கலெக்டர் சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் ஜூன் 17ல் உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகைக்கான சிறப்பு முகாம்
0