நெல்லை, செப்.2: நெல்லை மாவட்ட வருவாய் துறையில் மானூர், திசையன்விளை உள்ளிட்ட 5 தாசில்தார்களை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்ட வருவாய் துறையில் தாசில்தார்கள் 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அது குறித்த விவரம் வருமாறு: மானூர் தாசில்தார் முருகன் நெல்லை கலெக்டர் அலுவலக நதிநீர் இணைப்பு திட்ட தனி தாசில்தாராகவும், சேரன்மகாதேவி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நாராயணன் திசையன்விளை தாசில்தாராகவும், திசையன்விளை தாசில்தார் விஜய்ஆனந்த் நாங்குநேரி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், நாங்குநேரி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் இசக்கிப்பாண்டி சேரன்மகாதேவி கோட்டக்கலால் அலுவலராகவும், சேரன்மகாதேவி கோட்டக்கலால் அலுவலர் வைகுண்டம் சேரன்மகாதேவி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் கூடுதல் பொறுப்பாக சேரமாகாதேவி ஆதிதிராவிட நல தனிதாசில்தாரையும் சேர்த்து கவனிப்பார். இதற்கான உத்தரவை கலெக்டர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார்.