நெல்லை, ஜூன் 1: நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் 12 துணை பிடிஓக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 4 உதவியாளர்களுக்கு துணை பிடிஓவாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் துணை பிடிஓக்கள் மாற்றம், உதவியாளர்களுக்கு துணை பிடிஓ பதவி உயர்வு அளித்து கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அம்பாசமுத்திரம் ஒன்றிய கணக்கர் சுரேஷ் பதவி உயர்வு பெற்று நாங்குநேரி ஒன்றிய மண்டல துணை பிடிஓவாகவும் (மண்டலம்-1), நெல்லை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலக உதவியாளர் பாலபார்வதி பதவி உயர்வு பெற்று அம்பை ஒன்றிய மண்டல துணை பிடிஓவாகவும் (மண்டலம்-2), பாளை ஒன்றிய கணக்கர் (திட்டப்பிரிவு) சரண்யாதேவி பதவி உயர்வு பெற்று சேரன்மகாதேவி ஒன்றிய மண்டல துணை பிடிஓவாகவும் (மண்டலம்-1), அம்பை ஒன்றிய கணக்கர் சண்முகவேல் பதவி உயர்வு பெற்று களக்காடு ஒன்றிய மண்டல பிடிஓவாகவும் (மண்டலம்-2) நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நாங்குநேரி ஒன்றிய மண்டல துணை பிடிஓ (மண்டலம்-1) வைகுண்டபதி, களக்காடு ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (ஊராட்சிகள்), இப்பணியில் இருந்த இந்திரா, ராதாபுரம் ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (ஊராட்சிகள்), இப்பணியில் இருந்த கண்ணன் அதே ராதாபுரம் ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (பொது), இப்பணியில் இருந்து முத்துலெட்சுமி நாங்குநேரி ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (பொது), இப்பணியில் இருந்த சீனிவாசன் வள்ளியூர் ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (தணிக்கை), இப்பணியில் இருந்த சரோஜா, சேரன்மகாதேவி ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (சத்துணவு), சேரன்மகாதேவி ஒன்றிய மண்டல துணை பிடிஓ (மண்டலம்-1) ஆண்டாள் பாப்பாக்குடி ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (சத்துணவு) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
களக்காடு ஒன்றிய மண்டல துணை பிடிஓ (மண்டலம்-2) ஆறுமுகசாமி அம்பை ஒன்றிய மண்டல துணை பிடிஓவாகவும் (மண்டலம்-4), இப்பணியில் இருந்த கசாலி அம்பை. ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (ஊரக வேலை உறுதி திட்டம்), இப்பணியில் இருந்த சங்கரன், பாப்பாக்குடி ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (ஊராட்சிகள்), களக்காடு ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓ (பொது) சுப்பிரமணியன், அம்பை ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (சத்துணவு), இப்பணியில் இருந்த சிவா களக்காடு ஒன்றிய தலைமையிடத்து துணை பிடிஓவாகவும் (பொது) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.