தியாகராஜநகர், ஜூன் 12: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு டிஎன் ஸ்கில் திட்டத்தின் கீழ் ஏ2000 சொல்யூசன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 2 நாள் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 550 மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்தனர். 201 மாணவர்கள் நேரில் பங்கேற்று தங்களது தொழில் விருப்பங்களுக்கு ஏற்ப நேரடி தேர்வில் பங்கேற்றனர். தேர்வான மாணவர்கள் தொழில்நுட்ப துறைகளான செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு மின்சார வாகனங்கள், சென்சார்கள், இஆர்பி தீர்வுகள் ஆகியவற்றில் 169 பேர் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து ஏ2000 எஜு கனெக்ட் என்ற மையத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் திறந்து வைத்தார். இந்த மையம் மாணவர்களுக்கு தொழில் நுட்ப திறன்களை வளர்க்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், பதிவாளர் சாக்ரட்டீஸ் மற்றும் பலர் பேசினர். பணியிட செயலாளர்கள் மாணவர்களின் முயற்சிகளை பாராட்டி உற்சாகம் அளித்தனர்.
நெல்லை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்
0