நெல்லை,மே 26: நெல்லை அருகே பெண் போலீசை பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக தம்பதி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் தீபா. இவர் நேற்று முன் தினம் கோபாலசமுத்திரத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்தார். மேலும் அப்பகுதியில் போக்குவரத்து ஒழுங்கு பணியிலும் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு பிராஞ்சேரியை சேர்ந்த முருகன் என்ற வாலிபர் பைக்கில் தனது மனைவி முருகம்மாளுடன் வந்துள்ளார். அவரது பைக்கை நிறுத்திய ஏட்டு தீபா பைக்கிற்குரிய ஆவணங்களை கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அவற்றை தர மறுத்து ஏட்டு தீபாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ஏட்டு தீபா முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து எஸ்ஐ வள்ளிநாயகம் விசாரித்து முருகன் மற்றும் அவரது மனைவி இருவர் மீதும் போலீசை பணி செய்யவிடாமல் தடுத்து, அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
நெல்லை அருகே பெண் போலீசுக்கு கொலை மிரட்டல்
268
previous post