சுரண்டை, ஜூன் 11: நெல்லையில் மாநில சிறுபான்மை பிரிவு ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்க்கு சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில சிறுபான்மை பிரிவு ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரான பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், மாவட்ட பொருளாளர் முரளி ராஜா,சுரண்டை நகர காங். தலைவர் ஜெயபால்,மாநில பேச்சாளர் பால்துரை,கவுன்சிலர்கள் பாலசுப்ரமணியன், தேவேந்திரன், ஊத்துமலை பரமசிவன், ஏராளமான கட்சி நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தனர்.