பந்தலூர், ஜூன் 5: நெல்லியாளம் நகராட்சியின் வணிக வளாகம் பந்தலூர் பஜார் பழைய பேருந்து நிறுத்தம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் வங்கி கிளை, வக்கில் ஆப்பீஸ், பிரிண்டிங் பிரஸ், அஞ்சலகம், டிரைவிங் ஸ்கூல் மற்றும் காய்கறி, மளிகை, உணவகம் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகிறது. இவர்கள் பயன்படுத்தும் வகையில் வணிக வளாகத்திற்கு பின்பக்கம் கழிப்பறை உள்ளது.
இந்த கழிப்பறையின் செப்டிங் டேங் நிரம்பி காணப்படுவதால் மழைக்காலத்தில் மழைநீருடன் கழிப்பறை கழிவும் மழைநீரில் சேர்ந்து பஜார் பகுதியில் செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசி காணப்படுவதால் வணிக வளாகத்திற்கு வருபவர்கள் மற்றும் அங்கு இருப்பவர்களுக்கு நோய் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் விரைந்து கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.