கரூர், ஆக.12: நெரூர் அக்னீஸ்வரர் கோயிலில் 300 நாதஸ்வர, தவில் வித்துவான்கள் கலந்து கொண்ட நாத முழக்கம் இசை நிக ழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்டம் நெரூரில் சவுந்தரநாயகி உடனுறை அக்னீஸ்வரர் கோயில் அக்னீஸ்வரர், முருகன் சவுந்தரநாயகி, ராஜர் சன்னதி நடராஜர் சன்னதி கோயில் அமைந்துள்ளது. மேலும் பரிகாரம் மண்டப வேலைகள் பரிவார தேவதைகளாக சப்தமாதர், நால்வர், 63 நாயன்மார்கள் கன்னிமூல கணபதி, நவக்கிரகங்கள். காசி விசுவநாதர் விசாலா ட்சி. சரபேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகிய சுவாமிகள் அமைந்துள்ளன. இக்கோயிலில் பிரதான ராஜகோபுரம் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நெரூர் அக்னீஸ்வரர் வழி பாட்டு மன்றம் 15ம் ஆண்டு நிகழ்ச்சியை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட நாதஸ்வர வித்வான்கள், தவில் வித்வான்கள் கலந்து கொண்ட நாத முழக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை உலக மக்கள் எல்லோரும் நலமுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நாதஸ் வர, தவில் வித்வான்கள் நடத்திய இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து கோயிலில் சிறப்பு தீபாரதனை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்கள் தமிழ்நாடு கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்து கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொழில் அதிபர்கள், சான்றோர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை நெரூர் அக்கினீஸ்வரர் கமிட்டி நிர்வாகிகள் புயூபா புஷ்பராஜ், வியாசர் பைனான்ஸ் கார்த்திகேயன், அன்னை பள்ளி தாளாளர் மணிவண்ணன் உள்பட ஏராளர்கள் கலந்து கொண்டனர்.