பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அறை மற்றும் பல அடுக்கு வாகன பார்க்கிங்கை திறந்து வைத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியதாவது: அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட போது சிலர் அரசியலமைப்பு கூட்டாட்சி என்றும் சிலர் ஒற்றையாட்சி என்றும் கூறினர். அதற்கு பதிலளித்த அம்பேத்கர், அரசியலமைப்பு முற்றிலும் கூட்டாட்சி, அது ஒற்றையாட்சி அல்ல என தெளிவுபடுத்தினார்.
அமைதி மற்றும் போர்க்காலங்களில் இந்தியாவை ஒற்றுமையாகவும் வலுவாகவும் வைத்திருக்கும் அரசியலமைப்பை நாம் பெற்றுள்ளோம். இன்று நமது அண்டை நாடுகளின் நிலை என்ன என்பதை பார்க்கிறோம். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், நாடு ஒற்றுமையாகவும் வலுவாகவும் உள்ளது. அதற்கான பெருமை அரசியலமைப்பையே சாரும். இவ்வாறு அவர் கூறினார்.