பழநி, ஆக. 7: பழநியில் இருந்து புதுதாராபுரம் வரை செல்லும் இருவழிச்சாலை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.97.30 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணியை நேற்று நெடுஞ்சாலை துறை மதுரை கோட்ட தரக்கட்டுப்பாட்டு பொறியாளர் பிரச்சன்ன வெங்கடேஷ், உதவி கோட்ட பொறியாளர் சொக்கலிங்கம், பாபுராமன், உதவி பொறியாளர்கள் ஜெயபாலன், அருண் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பணியின் தரம், உரிய அளவீடுகளில் சாலை அமைக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினர்.