அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-72இறை அனுபவங்களின் ஏற்படும் இடையூறுகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதை பட்டரே கூறுகின்றார். இறை பண்புகளை அறிந்து கொள்வதற்கு சாத்திரங்களை பயிலுதல் வேண்டும் ‘‘சுருதிகளின் பணையும் கொழுந்தும்’’- 2 அறிந்தே – 3தீட்சை எடுத்துக் கொள்ள வேண்டும்‘‘தலைமேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட’’ – 32அடியவர்களை பிரியாது இருத்தல் வேண்டும்‘‘கூட்டியவா என்னை தன் அடியாரில்’’- 80கொள்கையில் தளராது இருத்தல் வேண்டும். ‘‘பரசமயம் விரும்பேன்’’- 23, பூசனை செய்யும் பணி ‘‘பத்மபதயுகம் சூடும்பணி – 27’’ என்பதிலிருந்தும் அறியலாம். மானுட மனமானது நிகழ்காலம் சார்ந்து பசிப்பிணி மற்றும் உடல் உபாதி இவைகளை தீர்த்துக் கொள்வதற்கும் துன்பத்தை தவிர்த்து இன்பத்தை அடைய எதைச் செய்யலாம் என்று உழலுமே அன்றி இறையருளால் அதை பெற்று விடலாம் என்று நம்பாது என்பதையே ‘‘கரும நெருஞ்சால் ’’- 3 என்பதிலிருந்து அறியலாம்.இமைப்போது – என்பது ஒன்றிற்கு ஒன்று அடிப்படையானதும் அடுத்தடுத்து நிகழ்வதுமான பண்பாகும். முதலில் ‘‘நெஞ்சில் இடர் தவிர்த்தல் பச்சை கொடியை பதித்தல்’’ என்ற இரண்டு செயல்களுக்கு பிறகே இமைப்போது என்பது நிகழும். அந்த இமைப்போதிருத்தலே நமக்கு செயலின் விளைவாகிய பயனை அனுபவமாக தரும். மனமானது செய்ய வேண்டிய செயல் குறித்து தன் காலத்தை செலவிருமே அன்றி இறைவியின் உருவத்தை (அ) திருப்பாத கமலங்களை எண்ணுதற்கு நேரத்தை ஒதுக்காது. ஒரு மாத்திரை – 67 (நொடி) நேரமாவது. மனதில் நிளை என்று காலத்தை வலியுறுத்துகிறது. ( இறைவனை நினைப்பதற்கான காலத்தை இங்கு குறிப்பிடுகின்றார் )’’ நின்றும், இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது’’- 10 என்பதிலிருந்தும் அறியலாம்.‘‘இருப்பர்’’ என்பது ஐந்தாக இங்கே பிரித்து விளக்கப்படுகிறது.1). மனம் புலன்களின் வழி சென்று மாசுபடாமல் எண்ணங்களற்ற இருத்தல்.‘‘ஆசைக் கடலில் அகப்பட்டு’’ – 32 என்கிறார் பட்டர். ஒவ்வொரு தேவதையின் அருளை பெறுவதற்கும் அந்த தோவதை குறித்த வழிபாட்டு முறையில் குறிப்பிட்டுள்ள சாத்திர அறிவை அறிந்திருத்தல் வேண்டும்.‘‘அறிந்தேன் எவரும் அறியா மறையை’’- 3சாத்திர அறிவுறுத்தலின் படி இடைவிடாத தொடர் முயற்சியின் வழி வந்த சிற்சில அனுபவத்தை பெற்றிருத்தல் வேண்டும்.இன்ப துன்பங்களின் வழி இறையருளே மெய்யென்று அவள் அருளன்றி மற்ற யாவும் பொய்யென்று அனுபவத்தில் இருக்கின்ற பண்பு வேண்டும். இதையே ‘‘பார்க்கும் திசைதொறும்’’- 85.உமையம்மையின் கருணை பண்பு நம் மீது இருத்தல் வேண்டும். இந்த ஐந்து பண்புகளை பெற்று இருப்பவர்களையே ‘‘இருப்பர்’’ என்கிறார். இதையே பட்டர் ‘‘கடைக் கண்களே’’- 69 என்கிறார். ‘‘பின்னும் எய்துவரோ’’ என்பதனால் இறந்த பிறகு மீண்டும் இப்பூவுலகில் உடல் தாங்கி பிறத்தல் என்கின்ற துன்பத்தை அடைவரோ என்றால் அடைய மாட்டார்கள் என்று வலியுறுத்தியதோடு இறைவியை தியானம் செய்யாதவர்கள் நிச்சயம் மீண்டும் பிறப்பார்கள் என்பதை மறைமுகமாக வௌிப்படுத்துகின்றார்.‘‘மரணம்’’ பிறவி இரண்டும் எய்தார்’’- 51 என்று வெளிப்படையாக கூறிய பட்டர் ‘‘எய்துவரோ’’ என்று தியானிப்பவரை விட, அவர் அடையும் பயனைவிட, தியானத்தையே மையப்படுத்துகிறார்.‘‘குடரும் கொழவும் குருதியும் தோயும் குரம்பையிலே’’குடரும் (இருட்டான கருப்பை) கங்கையானவள் சிவபெருமானின் தலையில் இருக்கக்கூடிய சந்திரனின் அருகில் இருப்பதால் என்றும் ஒளி பொருந்தியவளாக திகழ்கின்றாள். அருள் ஒளி பொருந்திய கங்கையை தியானிப்பவர்கள் ஒளியற்ற இருளான கருப்பைக்குள் நுழைவதை விரும்ப மாட்டார்கள் ‘‘தாயர் இன்றி மங்குவர்’’ என்கிறார் – 75 .குருதியும் ஆன்மாவை தூய்மைபடுத்தும் கங்கையின் அருளினால் மிகவும் தூய்மையான விண்ணுலகம் சென்று சுகப்பட விரும்புவார்கள். அன்றி கரும நெஞ்சால் மிகவும் அசுத்தமான இரத்தம் உரையும் உடலை எடுத்து இம்மண்ணுலகில் துன்பப்பட விரும்ப மாட்டார்கள். இதையே பட்டர் ‘‘பகீரதியும் படைத்த புனிதரும்’ ’- (4) என்கிறார்.‘‘கொழுவும்’’ – சிவ கங்கையின் திருவடியில் ஒடுங்கி ஆணவ மலமற்று மகிழ்ச்சியில் திளைப்பதை விரும்புவார்கள் அன்றி உடல் சார்ந்து மாயா மலமாகிற கொழப்படைந்து அனைத்து செயல்களுக்கும் தானே காரணம் என்று இன்ப துன்பத்தில் மயங்கி அவதியுறமாட்டார்கள்.‘‘வெறுக்கும் தகைமைகள் ’’- 46 என்பது பொருள். இறைவனுடய திருவடியில் தோய்ந்து முக்தி பெற விரும்பும் ஆன்மாக்கள் மாயையினாலே உடல் வாழ்கையில் தோய்ந்து துன்புறமாட்டார்கள். கங்கையை தியானிப்பவர்கள் தியானத்தின் பயனாக யாக்கையை வெறுப்பரே அன்றி விரும்பி துன்புறமாட்டார்கள் .‘‘தவம் முயல்வார் முத்தியும்’’- 29 என்கிறார் பட்டர்.இந்த பாடலானது பிறப்பறுத்தல், முத்தி பெறுதல் என் பயனை அடைவதற்கு உண்டான தியான பயிற்சி என்கிறது. சிவகங்கை என்ற சக்தியை சிவனுடைய தலையில் இருப்பவளாய் தியானிப்பதனால் பிறவிப் பிணியை நீக்கி. முத்தியை அளிக்க வல்லது என்கிறது ஆகமம். அபிராமி பட்டரும் இதை இப்பாடலின் மூலம் வலியுறுத்துகிறார். (தொடரும்)முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்…