காங்கயம்:காங்கயம் நகருக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வது குறித்து வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களுடன் ஆலோசனை கூட்டம் நகர்மன்றத் தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில், நகராட்சி ஆணையர் கனிராஜ் முன்னிலையில், காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் காங்கயம் நகருக்குள் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட நெகிழி மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், காங்கயம் நகராட்சி அறிவிப்பு என்று தலைப்பிட்டு, நெகிழிப் பையை கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட செயல்களுக்காக ரூ.1,000 முதல் ரூ.1,00,000 வரை அபராதம் விதிக்கப்படும், என நகராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் தோறும் துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது.