தேவகோட்டை, ஆக. 18: தேவகோட்டை பொது நூலக முழு நேர கிளை நூலகத்தில் உழவாரப்பணி நடந்தது. 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் வாசகர் வட்ட வாசகர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். வாசகர் வட்டத் தலைவர் பேராசிரியர் முருகன் தலைமை வகித்தார். நூலகர் சூரசங்கரன் வரவேற்றார். ரோட்டரி சங்கச் செயலர் ஜெகநாதன், தனியார் கல்லூரி முதல்வர் ஜான் வசந்தகுமார், ரோட்டரி முன்னாள் துணை ஆளுநர் டாக்டர் கணேசன் உரை நிகழ்த்தினர். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் குமார், ஷாஜகான், கோபு ஆகியோர் கலந்து கொண்டனர். நூலகர் வைத்தீஸ்வரன் நன்றி கூறினார்