பாப்பாரப்பட்டி, செப்.4: பென்னாகரம் வட்டம் கிட்டம்பட்டி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாலையோரம் நூறாண்டு கால விவசாய கிணறு ஒன்று உள்ளது. ஆரம்ப காலத்தில் கிராமத்து மக்களுக்கு குடிநீர் வழங்கவும், விவசாய பயன்பாட்டுக்கும் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் இந்த கிணற்றை முறையாக பராமரிக்காததால் பக்கவாட்டில் உள்ள தடுப்பு சுவர்கள் இடிந்து உள்ளே விழுந்து மூடியது. தண்ணீர் இல்லாமல் வீணாகி கிடந்துத. இந்நிலையில் இந்த நூற்றாண்டு கால கிணற்றை 100 அடி ஆழம் தூர்வாரி புதுப்பித்து விவசாய பணிக்கு தண்ணீர் எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நூறாண்டு கால கிணற்றில் தூர்வாரும் பணி
previous post