பழநி, ஆக. 3: பழநி அருகே வேலாயுதம்பாளையம்புதூரில் விவசாயிகளுக்கு நவீன கரும்பு சாகுபடி மற்றும் நுண்ணீர் பாசன விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள், சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கும் முறை, அமைக்க வேண்டியதன் அவசியம், விவசாயிகளுக்கான அரசு மானியங்கள், அதனை பெறும் வழிமுறைகள், நீர் மேலாண்மை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நுண்ணீர் பாசன விழிப்புணர்வு முகாம்
previous post