மதுரை, ஆக. 6: விவசாய நிலங்களில் நுண்ணீர் பாசன திட்டம் அமைக்க மானியம் பெறலாம் என, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கான நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், 2024-25ம் நிதியாண்டில் தோட்டக்கலைத் துறையின் மூலம் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் மற்றும் தௌிப்பு நீர் பாசனம் அமைக்க 1600 ஹெக்ேடர் பொருள் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதில் ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு 7.5 சதவீதமும், பெண் விவசாயிகளுக்கு 30 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தேவையான குறிப்பிட்ட பொருட்களுக்கான செலவில், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்படுகிறது. மேலும் தன்னியக்க நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவிட ஒரு ஹெக்ேடருக்கு ரூ.20 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் (https://tnhorticulture.tn.gov.in) என்ற இணையத்தில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுண்ணீர் பாசன திட்டத்திற்கு மானியம்
previous post