நரசிங்கபுரம், மே 12: ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் மக்கள், தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பழங்கள் மற்றும் குளிர்பானங்களை நாடுகின்றனர். அதில் இளநீர், வெள்ளரி மற்றும் நுங்கு அதிகம் வாங்கி வருகின்றனர். இதில் ஆத்தூர், நரசிங்கபுரம், செல்லியம்பாளையம், உப்பு ஓடை, கடைவீதி, ராணிப்பேட்டை பகுதியில் நேற்று நுங்கு விற்பனை அதிகரித்து. ஒரு நுங்கு ரூ.6க்கும், 10 நுங்கு ரூ.50க்கு விற்பனையானது. இதனால் நுங்கு விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நுங்கு விற்பனை அதிகரிப்பு
0