ஆத்தூர், ஆக.29: ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். பொது செயலாளர் செல்வராஜ், துணை பொது செயலாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், கீரிப்பட்டி பேரூராட்சியில் அரசுக்கு சொந்தமான, நீர்நிலை வழிப்பாதை இணை தனி நபருக்கு பட்டா போட்டதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் குமார் நன்றி கூறினார்.
நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்
previous post