ஊட்டி, ஜூன்10: நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணி நகர,ஒன்றிய,பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று நடந்தது. நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ தலைமை வசித்தார்.மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் வரவேற்றார்.
மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பிரகாஷ்எம்பி, கழகத் தேர்தல் பணிக்குழு செயலாளர் மற்றும் தலைமை அரசு கொறடா ராமச்சந்திரன், உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் முபாரக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாபு, நாகராஜ், வினோத், பத்மநாபன், நௌபுல், முரளிதரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சமூக வலைதள பயிற்சியை சூரிய கிருஷ்ணமூர்த்தி மற்றும் இளமாறன் ஆகியோர் வழங்கி சிறப்புரையாற்றினார்.