Wednesday, April 24, 2024
Home » நீதிமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட

நீதிமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட

by Karthik Yash

விழுப்புரம், மார்ச் 3: விழுப்புரம் மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றிவரும் ஊழியர்களான ராஜேந்திரன், ஜெயந்தி மற்றும் அமுதா ஆகியோருக்கு அவர்களது அடிப்படை ஊதியத்தில் இருந்து ஐந்து சதவீதம் தனிச் சம்பளமாக 1992ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த தனிச் சம்பளம் மூவருக்கும் தவறுதலாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீண்டும் வசூலிக்க உள்ளதாக கடந்த 2022ம் ஆண்டு தமிழக நிதித்துறை (சம்பளம்) நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் எஸ்.தமிழ்செல்வன் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அவர், ஐந்தாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையிலேயே மூவருக்கும் தனிச் சம்பளம் வழங்கப்பட்டது. அதனை அவர்கள் நீண்ட காலமாக அனுபவித்து வருகிறார்கள். தணிக்கை குழு எதிர்ப்பு தெரிவிப்பதால் இதனை திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுப்பது தவறானது என்று வாதிட்டார். தமிழக அரசு சார்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் எம்.ஜெயந்தி, உயர் நீதிமன்றம் சார்பில் வி.விஜய் சங்கர் ஆகியோர் ஆஜராகி, ஐந்து சதவீத தனிச் சம்பளம் 1988ம் ஆண்டு மே மாதம் வழங்கப்பட்ட நிலையில், 1992ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களுக்கு வழங்கியது தவறு என்பதால்தான் திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தவறாக நிர்ணயிக்கப்பட்ட தொகையை சரிசெய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், மனுதாரர்கள் நீண்ட காலமாக இந்த சலுகையை அனுபவித்து வரும்நிலையில், ஏற்கனவே கொடுத்த தொகையை திடீரென வசூலிப்பது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, வழங்கப்பட்ட தனிச் சம்பளத்தை திரும்ப வசூலிக்கக் கூடாது. ஒருவேளை தொகை ஏதேனும் வசூலிக்கப்பட்டிருந்தால் அதனை மூன்று மாதங்களில் திரும்ப வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

You may also like

Leave a Comment

3 + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi