மாமல்லபுரம், ஜூன் 25: நீதிமன்ற உத்தரவின்படி மாமல்லபுரத்தில் கட்சி கொடி கம்பங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நீதிமன்ற உத்தரவின்படி சாலையோரம் உள்ள கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாமல்லபுரம் நகராட்சிக்கு உட்பட்ட தேவனேரி, மாமல்லபுரம் இசிஆர் நுழைவு வாயில், பூஞ்சேரி சந்திப்பு, நகராட்சி அலுவலகம் அருகே என பல்வேறு இடங்களில் சாலையோரம் நடப்பட்டிருந்த அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்றும் பணியில் மாமல்லபுரம் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, படிப்படியாக கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.