திருப்பூர், ஜூன் 26: தமிழகம் முழுவதும் சிவில் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த செல்லத்துரை திருப்பூர் மாவட்ட மக்கள் நீதிமன்ற தலைவராகவும், சேலம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த நம்பிராஜன் உடுமலை 4வது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், உடுமலை 4வது கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருந்த ராஜலிங்கம் கோவை கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும் நியமித்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அல்லி உத்தரவிட்டுள்ளார்.