பெருந்துறை, ஜுன் 18: ெபருந்துறை அடுத்த, விஜயமங்கலம் பாரதி அகாடமி மாணவர் அகிலன், நீட் தேர்வில், தேசிய அளவில், 928 ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த மாணவர், இயற்பியலில் 152 மதிப்பெண்களும், வேதியியலில் 131 மதிப்பெண்களும், உயிரியலில் 325 மதிப்பெண்களும் என மொத்தம் 720க்கு, 608 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.இவர், பாரதி இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ., பள்ளியில், 12ம் வகுப்பு முடித்துள்ளார். மேலும், சச்சின் 557 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், தனிகா 556 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளார்.
நீட் தேர்வு எழுதிய, 150 மாணவர்களில், 70க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, இந்த ஆண்டு மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக, இந்த நிறுவனத்தின் தலைவர் பி.வி. செந்தில்குமார் தெரிவித்தார்.வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பாரதி கல்வி நிறுவனத்தின் தாளாளர் வி.வி. மோகனாம்பாள் பாராட்டினார்.