ஊத்தங்கரை, ஆக.28: ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ரூபிகாவுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ராதிகா தலைமை வகித்தார். வழக்கறிஞர் பிரபாவதி, ஆடிட்டர் ஜெயசுதா, காவலர் கல்பனா முன்னிலை வகித்தனர். மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவியை பாராட்டி விருது, பதக்கம், நினைவு பரிசு, புத்தாடைகள், கல்வி உபகரணங்கள் மற்றும் கல்லூரி பை ஆகியவற்றை ஊத்தங்கரை மருத்துவ அலுவலர் மதன்குமார், தீயணைப்பு நிலைய அலுவலர்(பொ) ராமமூர்த்தி, முகமது பாபு சையது, உதவித் தலைமை ஆசிரியர் கணேசன் ஆகியோர் வழங்கி வாழ்த்தினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், ரூபிகாவின் பெற்றோர் பழனிசாமி-ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவித் தலைமை ஆசிரியர் பிரிஜிட் ரீட்டா மேரி, ஜேஆர்சி ஆசிரியர் கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.
நீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா
previous post