திருப்பூர், ஆக.19: ‘நீட்’ தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய பாஜ அரசையும், அதற்கு துணை போகும் ஆளுநரையும் கண்டித்து, திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் நாளை (20ம் தேதி) உண்ணாவிரத போராட்டம் நடத்துவது சம்பந்தமாக, திமுக வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் ராஜாராவ் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செல்வராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது, வருகிற 20ம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சியினரை திரளாக பங்கேற்க செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் தெற்கு மாநகர செயலாளர் தினேஷ்குமார், மண்டலத் தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.