நாமகிரிப்பேட்டை, நவ.2: நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி, நாமகிரிப்பேட்டை திமுக இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணிகளின் சார்பில் கையெழுத்து இயக்கம் நாமகிரிப்பேட்டையில் நடந்தது. மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரி நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் முகாம் அமைத்து, டிஜிட்டலில் கையெழுத்து பெறப்பட்டது. நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நுழைவாயில் மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து பெறப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ் தலைமை வகித்தார். பேரூர் திமுக செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். வட்டார அட்மா குழு தலைவர் ரவீந்திரன், சேந்தமங்கலம் தொகுதி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் தாமரைக்கண்ணன், நாமகிரிப்பேட்டை பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பழனிவேல், முருகதாஸ், மற்றும் திமுக நிர்வாகிகள் விஜயபாபு, ரமேஷ், மணிகண்டன், நித்தியானந்தம், ராஜேந்திரன், லோகநாதன் உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.