நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கடந்த 25ம் துவங்கி 5ம் தேதி வரை 6 நாட்கள் பயிற்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் என்ற தலைப்பில் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களில் விவசாயிகளை தேர்ந்தெடுத்து 28 இளம் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்று வந்தது . வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் முன்னிலையில். வேளாண்மை அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் பெரியார்சாமி தலைமையில் பயிற்சி நடைபெற்றது. முதல்நாள் விவசாய நிலத்தில் பயிர்களை சாகுபடி செய்துள்ள நிலத்திற்கு அழைத்துச் சென்று செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.2ம் நாள் நிலைய உதவி பேராசிரியர் அருட்செல்வி புதிய நெல் ரகங்கள் குறித்து எடுத்துக் கூறினார். மூன்றாம் நாள் உதவி பேராசிரியர் கருணாகரன் இயற்கை வேளாண்மையில் நுண்ணுயிர் உரங்களின் பங்களிப்பு மற்றும் உரங்கள் தயாரிப்பது பற்றிய கூறினார்.