நீடாமங்கலம், ஜுன் 13: நீடாமங்கலத்தில் பொது தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கு வணிகர் சங்கத்தினர் பாராட்டி பரிசு வழங்கினர். நீடாமங்கலம் வணிகர் சங்கத்தின் சார்பில் நீடாமங்கலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி சிறப்பு செய்கின்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவர்களுக்கு நினைவு பரிசும் ரூபாய் ஆயிரம் ஊக்கத்தொகையும் நீடாமங்கலம் வணிகர் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. நீடாமங்கலம் மேல்நிலைப்பள்ளி , நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி , நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் மேரிஸ் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளிகளில் முதலிடம் வந்த மாணவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு வணிகர் சங்க தலைவர் செந்தமிழ் செல்வன் தலைமை ஏற்றார்.சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் கலந்துசு கொண்டனர்.