நீடாமங்கலம், மே 31: நீடாமங்கலம் வட்டம் ஒரத்தூர் திரெளபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவையொட்டி பக்தர்களின் காவடி, பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது.இக்கோயிலில் வருடம் தோறும் நடைபெறும் தீமிதித் திருவிழா இந்தாண்டும்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த 12 ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம்,ஆராதனைகளும்,இரவு சீர்காழி ஜெயராமபாகவதர் குழுவினரின் பாகவதகதையும் நடைபெற்று வருகிறது. கடந்த 26 ம் தேதி இரவு தீமிதித்திருவிழா நடந்தது.தொடர்ந்து திரெளபதியம்மன்மற்றும் பரிவார தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.தினந்தோறும் உபயதாரர்களின் மண்கப்படி நடைபெற்று வருகிறது.நேற்று நீடாமங்கலம் கோரையாற்றின்கரையிலிருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு தஞ்சை சாலை வழியாக கோயிலை வந்தடைந்தது.திரெளபதியம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.