நீடாமங்கலம், மே 24: நீடாமங்கலத்தில் குழந்தை பாக்கியம் அருளும் சந்தானராமர் கோயிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைமுன்னிட்டு சீதா, லெட்சுமணர், அனுமன் சமேத சந்தான ராமர் மற்றும் பரிவார தொய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.