நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரண கூட்டம் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் சோம.செந்தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தலைவர் முன்மொழிந்த தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்ற பட்டது. கூட்டத்தில் பேசிய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் பாரதிமோகன் நடைபெறும் பணிகளை உறுப்பினர்கள் அறிந்துகொள்ள தகவல் அளித்து பணிகளை உறுப்பினர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.