நீடாமங்கலம், ஆக. 11: நீடாமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சந்தனமாதா தேர் பவனி நடந்தது. நீடாமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் புனித சந்தனமாதா கோயிலில் கடந்த 2ம் தேதி மாலை நீடாமங்கலம் பங்குதந்தை ஆரோக்கியதாஸ் திருப்பலியும், தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 9ம் தேதி வரை நவநாள் ஜெபம் நடந்தது. அன்று இரவு தேர் புனிதம் செய்யப்பட்டு திருவிழா திருப்பணியும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித சந்தனமாதா திருவுருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது.
கொத்தமங்கலத்திலிருந்து தேர் பவனி புறப்பட்டு நீடாமங்கலம் முக்கிய கடை வீதிகள் வழியாக வான வேடிக்கை, இன்னிசை நிகழ்ச்சியுடன் மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நீடாமங்கலம் பங்கு தந்தை மற்றும் அருள் சகோதரிகள், கொத்தமங்கலம் ஆலய தெரு மக்கள் செய்திருந்தனர்.