நீடாமங்கலம், ஆக. 23: நீடாமங்கலம் அருகே அனுமந்தபுரம் கீழத்தெருவில் ரமேஷ் மனைவி மார்தாள் என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று சுமார் 11.10 மணி அளவில் இவரது வீட்டிற்கு அருகில் அருகில் இருந்த மரக்கிளை ஒடிந்து மின் கம்பியின் மீது விழுந்தது. அதனால் கம்பியில் எரிந்த நெருப்பு பொறியால் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. உடன் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை விரைந்து அனைத்து அக்கம்பக்கத்தில் பரவாமல் தடுத்தனர். அவர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
தகவல் அறிந்த ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மாராதாளுக்கு ஆறுதல் தெரவித்து \”கலைஞர் கனவு இல்லம்\” திட்டம் மூலம் புதிய வீடு கட்ட ஏற்பாடு செய்துவதாக உறுதியளித்தார். அவருடன், ஊராட்சி முன்னாள் தலைவர் அனுமந்தபுரம் கீதா காமராஜ் இருந்தார். மேலும் வட்டாட்சியர் தேவேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று வேட்டி, புடவை, அரிசி 10 கிலோ, ரூ.8 ஆயிரம் நிவாரண உதவிகள் வழங்கினார்.