நீடாமங்கலம், ஜுன் 7: நீடாமங்கலம் ஒன் றியத்தில் பள்ளி மாணவர்களுக்கு 2 ஆவது செட் சீருடை வழங்கப்பட்டது. திருவாரூர் மாவ ட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருதி நான்கு செட் சீருடைகளை வழங்கி வருகிறது. இதில் நீடாமங்கலம் ஒன்றியத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இரண்டாம் செட் சீருடைகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது.இந்திலையில் நேற்று வட்டராக்கல்வி அலுவலர் இன்பவேணி கற்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் அன்புமணி இருந்தார்.
நீடாமங்கலம் அருகே கற்கோவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை
0