நீடாமங்கலம், பிப். 15: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கு பாதுகாப்பான முறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவளிப்பது குறித்து நேற்று முன்தினம் பயிற்சியளிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு அலுவலர் கர்ணன் பயிற்சியளித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலெட்சுமி மற்றும் பாஸ்கர், சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார்,சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.