தஞ்சாவூர், ஜூன் 5: தஞ்சை அலமேலு நகர் பூங்கா செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. அங்கே இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் அட்டகாசம் செய்வதாக கூறப்படுகிறது. எனவே பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை-நாகை சாலை அருகே அலமேலு நகர் உள்ளது. இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக அலமேலு நகரில் மாநகராட்சி பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள், மின்வி ளக்குகள் அமைக்கப்பட்டது. இந்த பூங்காவினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பூங்கா முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. தற்போது பூங்கா முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது பூங்காவை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டிரு ந்த விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்துசேத மடைந்து கிடக்கிறது. பூங் காவுக்கு வருபவர்கள் இளை ப்பாறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த இருக்கைகள் உடைந்து கிடக்கிறது.
முறையான பராமரிப்பு இல்லாததால் பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலமேலுநகர் பகுதியில் உள்ள பூங்காவை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.